MARC காட்சி

Back
குன்னாண்டார் கோயில் குடைவரை
245 : _ _ |a குன்னாண்டார் கோயில் குடைவரை -
300 : _ _ |a குடைவரை
500 : _ _ |a நடுவில் அமைந்துள்ள முற்றுப்பெற்ற குடைவரை, முகப்பில் இரு தூண்களையும் பக்கவாட்டில் சுவரினை யொட்டி இரு அரைத்தூண்களையும் கொண்டுள்ளது. முகப்பை அடுத்து முன் மண்டபம், கருவறை என இரு முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளன. முன் மண்டபமும் முகப்பு போன்றே தூண்களைப் பெற்றுள்ளன. தூண்கள் மேலும் கீழும் சதுரமாகவும் நடுவில் எட்டுப்பட்டைகளுடனும் காணப்படுகின்றது. மேலே பட்டைகளுடன் கூடிய தரங்கப் போதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் அமைப்பு பல்லவர் கலைப்பாணியை நினைவூட்டுகின்றன. "சாந்தார வகை" அமைப்பு பெற்ற இக்குடைவரையின் கருவறையைச் சுற்றிவர திருச்சுற்று வழி காணப்படுகிறது. குடைவரைக் கோயிலையொட்டி முன்புறமாக அமைக்கப் பட்டுள்ள மண்டபப் பகுதிகள் பிற்காலத்தில் குடைவரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. குடைவரைப் பின்புறச் சுவற்றின் நடுவே குடைந்தமைக்கப்பட்டுள்ள கருவறையில் தாய்ப்பாறையிலேயே செதுக்கி அமைக்கப்பட்ட இலிங்க உருவம் உள்ளது. பாண்டியர் களுக்கே உரித்தான பாணியில் அமைந்த இலிங்கத்தில் ஆவுடையார் எட்டுப்பட்டைகள் கொண்டதாகக் காட்டப்பட்டுள்ளது. பர்வதகிரீஸ்வரர் என்னும் பெயரில் இவர் வழங்கி வருகின்றார். கருவறை வாயிலின் இருபக்கமும் வாயிற்காவலர்களின் சிற்பங்கள் திரிபங்க நிலையில் காணப்படுகிறது. வலதுபுறம் உள்ள வாயிற்காவலரின் தலையில் கிரீடம், வலது கையில் நாகம் சுற்றிய கதை ஆகியவை காணப்படுகிறது முக மண்டபத்தின் தென்புறச்சுவரில் வலம்புரி விநாயகர் நான்கு கரங்களுடன் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளார். துதிக்கையில் மோதகம் காணப்படுகிறது. இதே மண்டபத்தின் வடபுறச் சுவரில் உமையுடன் கூடிய சிவபெருமானின் சிற்பமும் அமைந்துள்ளது. இருவரும் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றனர். ஜடாமகுடம் தலையை அலங்கரிக்க அணிகலன்கள் அதிகமின்றி இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு கைகளில் முன் வலக்கை முப்புரி நூலைப்பிடித்த நிலையிலும், முன் இடக்கை தொடைமீது வைத்தவாறும், மேல்நோக்கிய பின் இடக்கையில் மழுவும் பின் வலக்கையில் சடையைப் பிடித்தவாறும் இச்சிற்பம் காணப்படுகிறது. பொதுவாக இவர் தன் பின் வலக்கையில் மழுவும் பின் இடக்கையில் மானும் கொண்டு விளங்குவார். ஆனால் இங்குள்ள சிவபிரானின் உருவ அமைப்பு மாறுபட்டுக் காணப்படுகிறது. அம்மை உமையின் வலக்கையில் மலரும் இடக்கை தொடைமீதும் வைத்தவாறு காணப்படுகிறது. உமையின் அருகே சேடி ஒருத்தியின் உருவமும் காணப்படுகிறது. அமர்ந்த நிலையில் உள்ள இவ்வுருவங்கள் பிரான் மலை மற்றும் திருமலை ஆகிய குடைவரைக்கோயில்களில் காணப்படும் வடிவ அமைப்பினின்றும் வேறுபட்டுள்ளது. தெற்கிலும் வடக்கிலும் உள்ள முற்றுப்பெறாத குடைதளிகளின் முகப்பு, இரு தூண்களைக் கொண்டுள்ளன. வடக்கிலுள்ள முற்றுப்பெறாத குடைவரைக் கோயிலில் வடக்குக் கோட்டத்துச் சுவரில் சன்டிகேஸ்வரரின் சிற்ப உருவம் காணப்படுகிறது. சன்டிகேஸ்வரர் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். இவரது வலக்கை மழுவும் பெற்று இடக்கை தொடைமீது வைத்தவாறும் காணப்படுகிறது. இக்குடைவரையில் தந்திவர்மனின் ஐந்தாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டும் மூன்றாம் நந்திவர்மனின் மூன்றாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டும் காணப்படுகின்றன. இரண்டாவது கல்வெட்டு வடுவூரைச் சேர்ந்த கணபதிமான் என்ற பகைச்சந்திர விசையரையன் நூறு அடியவர்க்கு திருவாதிரை நாளன்று அண்ணம் அளிக்க இருநூறுநாழி அரிசி அளித்தமையைக் கூறுகிறது. பல்லவ மன்னர்களது இவ்விரு கல்வெட்டுகளினின்றும் அவர்களது ஆட்சி, தெற்கில் இப்பகுதிவரை பரவியிருந்து என்பதைத் தெரிவிக்கின்றது. முதல் கல்வெட்டு வாலி வடுகன் என்பவர் செய்வித்த வாலி ஏரியைக் குறித்து குறிப்பிடுகிறது. இங்குள்ள இராசராசனின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றும் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு ஒன்றும் பிற்காலத்தில் இப்பகுதி சோழர்களின் ஆட்சிக்குட்பட்டிருந் தமையையும், மாணியங்கள் அளிக்கப்பட்டச் செய்தியினையும் விவரிக்கின்றன. பாண்டிய மன்னனின் அரச ஆணைக் கல்வெட்டு ஒன்றும் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் பன்னிரெண்டாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றும் இங்கு உள்ளன. மற்ற கல்வெட்டுகள் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட மண்டபங்கள் பற்றியும் திருப்பணிகள் குறித்தும் விவரிப்பவை. விஜயநகர மன்னன் கல்வெட்டொன்று இங்குள்ள ஈசனை குன்றக்குடி உடைய நாயனார் எனக் குறிப்பிடுகின்றது. இக்குடைவரைக் கோயில் முத்தரையர்களால் எட்டாம் நூற்றாண்டில் குடைந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குடைவரைக் கலைப்பாணியின் மூலம் அறியமுடிகிறது.
510 : _ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
520 : _ _ |a புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் வட்டத்தில் உள்ளதொரு ஊர் குண்ணான்டார் கோயில். திருச்சி - கீரனூரிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் குண்ணான்டார் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையில் கிழக்குத் திசையை நோக்கியவாறு அமைந்துள்ள குடைவரையின் வடபுறமும் தென்புறமும் மேலும் இரண்டு குடைவரைக்கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் இவ்விரு குடைவரைகளும் முழுவதுமாக முற்றுப்பெறவில்லை.
653 : _ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், பாண்டியர் குடைவரைகள், குகை, குகைக் கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் சமணம், சமணர், சமணம், சமணர் குடைவரை, சித்தன்னவாசல், சித்தன்னவாசல் சமணர் குடைவரை, சிற்றண்ணல்வாயில், சமணர் புடைப்புச் சிற்பங்கள், மரபுச் சின்னம், தொல்லியல் சின்னம், வரலாற்றுச் சின்னங்கள், சமணர் வழிபாட்டுத்தலங்கள், சமணர் கோயில்
700 : _ _ |a சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a குன்னாண்டார் கோயில் மலை |c குன்னாண்டார் கோயில் |d புதுக்கோட்டை |f கீரனூர்
906 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.582317365475
915 : _ _ |a 78.897679577897
934 : _ _ |a குன்னாண்டார் கோயில் விஷ்ணு குடைவரை
995 : _ _ |a TVA_MON_00087
barcode : TVA_MON_00087
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00087/TVA_MON_00087_புதுக்கோட்டை_குன்னான்டார்-கோயில்_குடைவரைக்-கோயில்-0001.jpg

TVA_MON_00087/TVA_MON_00087_புதுக்கோட்டை_குன்னான்டார்-கோயில்_குடைவரைக்-கோயில்-0002.jpg

TVA_MON_00087/TVA_MON_00087_புதுக்கோட்டை_குன்னான்டார்-கோயில்_குடைவரைக்-கோயில்-0003.jpg